இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!
மிக வேகமாக செய்திகள் பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான டிவிட்டர், விரைவு செய்திகளுக்கான தளமாகவே இயங்கி வருகிறது. மிக சிறப்பான செய்தி ஊடகமாக இருந்தாலும் அது தனது வருவாயை பெருக்குவதில் சில சிக்கலை சந்தித்து வருகிறது. சமூக வலைதளங்களை பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது தளத்தில் தக்கவைக்கும்போதே விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக இப்பொழுது, பயனாளர்கள் தங்கள் timelines மற்றும் செய்தி பிரிவுகளில் இருந்தபடியே பாடல், இசை அல்லது எதேனும் ஒரு ஒலி களை கேட்கும் வாய்ப்பினை அளிக்க உள்ளது.
இதற்காக பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். ஒலிச் சேவை நிறுவனமான SoundCloud உடன் இணைந்து செயல்பட உள்ளது. SoundCloud ஆடியோவுக்காண யூ டியூப் என்று கூட சொல்லலாம்.
இந்த சேவைக்கு Audio Card என்று பெயரிட்டுள்ளனர். மேலும் தற்பொழுது SoundCloud இணைந்து துவங்கினாலும், வரும் காலத்தில் மேலும் பல நிறுவனங்களை தன்னுடன் இது இணைத்து கொள்ளும் எனத் தெரிகிறது.
அதே போல இந்த Audio Card சேவையில் இசை கலைஞர்கள் தங்கள் சிறந்த படைப்புகளை மக்களிடம் எடுத்து செல்ல உதவுகிறது. இது இசை கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மிக சிறந்த வாய்ப்பாகும்.
ஆப்பிளின் iTunes ஆதிகத்திலேயே இந்தத் துறை இருக்கிறது. இப்பொழுது SoundCloud உடன் இணைந்து டிவிட்டர் இந்த துறையில் இறங்குகிறது. டிவிட்டர் நல்ல வாய்ப்பாக அதற்க்கு வேகமாக செய்தி பரப்பக் கூடிய கோடிக்கணக்கான பயனர்கள் இருப்பதே ஆகும்.
டெபிட், கிரடிட் கார்டு விவரங்களைத் திருடும் வைரஸ்கள் : இணையப் பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை
டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்களை இணைய தளம் வழியாக திருடும் வகையிலான வைரசை விஷமிகள் பரப்பி வருவதாக இணைய பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர். இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரடிட் கார்டின் எண், ரகசியக் குறியீடு ஆகியவற்றைத் தெரிவிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஓஎஸ் எனப்படும், கடைகளில் பயன்படுத்தப்படுகிற கையடக்க கருவியில் டெபிட் அல்லது கிரடிட் கார்டை பயன்படுத்தும்போதும் இந்த வைரசைப் பரப்புவதற்கு குறி வைத்து செயல்படுவதாகவும் டெல்லியைச் சேர்ந்த சிஇஆர்டி எனப்படும் இணையதள பாதுகாப்புத் துறை எச்சரித்திருக்கிறது. ட்ரோஜன் மற்றும் பாட்நெட் வகையைச் சேர்ந்த இந்த வைரசால் ரகசியத் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உங்களின் முகத்தை Photoshop-ல் Terminator அர்னோல்ட் போல மாற்ற
இந்தப் வீடியோவில் உங்களின் முகத்தை Terminator Arnold போல மற்றும் முறையை இங்கே விளக்கியுள்ளேன்.