இந்த இணையதளம் நமது கிராமம் மற்றும் பக்கத்து கிராமங்களின் அன்றாட முக்கிய நிகழ்வுகளையும் நம் மக்களின் திறமைகளையும் உலகளவில் கொண்டுசெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உங்கள் இணையதளம்...

வியாழன், 25 டிசம்பர், 2014

Happy birthday Dhananya

Wish you a Many Many Happy returns of the day
may god bless u health and wealth

Happieeeeeeeee b'day Dhananya kutty...

-T.K.Balanbalaji & S.Suryabalanbalaji

புதன், 19 நவம்பர், 2014

துக்கத்தில் து.கல்லம்பட்டி மக்கள்...

கடந்த திங்கள் கிழமை எதிர்பாராத விதமாக மற்றொரு கோவில்காளையுடன் சண்டையிட்டதில் து.கல்லம்பட்டி கோவில்காளை இறந்து விட்டது. இதனால் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினார்கள். பிறகு இறந்துபோன கோவில் காளையை அலங்காரம் செய்து ஊர்வலாமாக எடுத்து சென்று வணங்கி அடக்கம் செய்தனர். 
ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட போது எடுத்த புகைப்படம் 






கோவில் காலை இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் 

புகைப்படம் திரு.சுதாகரன், சிங்கப்பூர்.

புதன், 29 அக்டோபர், 2014

'டாக்டராக" சிகிச்சை கொடுத்த நர்சு கைது

தும்பைப்பட்டி அம்பலகாரன்பட்டியில் 4-ம் வகுப்பு படித்தவர் ஆங்கில மருத்துவராக மருத்துவமனை நடத்திவருவதாக தகவலறிந்த போலீஸார், போலி பெண் மருத்துவரைக் கைது செய்தனர்.
தும்பைப்பட்டி அம்பலகாரன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி விசாலாட்சி (53) . இவரது வீட்டில் சிறிய அறையில் படுக்கை வசதியுடன் மருத்துவமனையை நீண்டகாலமாக நடத்தி வந்துள்ளார். அவர் போலி மருத்துவர் என மேலூர் போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீஸார் விசாலாட்சி மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர். அங்கு ஆங்கில மருத்துவமுறைக்கான ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் இருந்ததை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அவரிசம் நடத்திய விசாரணையில் நான்காம் வகுப்பு படித்துள்ள அவர் சில மருத்துவமனைகளில் வேலைசெய்த அனுபவத்தைக் கொண்டு மருத்துவம் செய்துள்ளார்.
தும்பைப்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. இருப்பினும் கிராமப்புற மக்களது அறியாமையைப் பயன்படுத்தி இந்த போலி மருத்துவர் மருத்துவமனையை நடத்திவந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்

தேவர் குருபூஜை விழா: மதுரை நகருக்குள் 2 நாட்கள் லாரிகள் நுழைய தடை

தேவர் குரு பூஜை விழாவுக்கு மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் எப்படி செல்ல வேண்டும் என்று மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: –
தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்பவர்களில் பலர் முளைப்பாரி ஊர்வலம், பால்குடம் எடுப்பது வழக்கம். அவ்வாறு மேற்கொள்பவர்கள் போலீசாரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே ஊர்வலங்கள் நடத்த வேண்டும்.
குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்று, அங்கு அளிக்கப்படும் அனுமதி சீட்டை வாகனங்களின் முன்பு ஒட்ட வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது. அவ்வாறு சட்டத்தை மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவின் போது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாகவும் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேவர் குருபூஜைக்கு வாகனங்களில் செல்பவர்களுக்கான வழித்தடங்கள் பின்வருமாறு:–
நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, பெரியார் பஸ்நிலையம், மேற்கு வெளிவீதி, வடக்கு வெளிவீதி, யானைக்கல் கல்பாலம், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேளக்கார தெரு, கோரிப்பாளையம், தேவர் சிலை, பனகல் ரோடு, குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம், ராமநாதபுரம் சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.
தேனி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் முடக்குச்சாலை, தேனி மெயின்ரோடு, காளவாசல், அரசரடி, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேளக்காரத்தெரு, கோரிப்பாளையம், தேவர் சிலை, பனகல் ரோடு, ஆவின் ஜங்ஷன், குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம், ராமநாதபுரம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாத்திமா கல்லூரி, கொன்னவாயன் சாலை பாலம், மேளக்கார தெரு கோரிப்பாளையம் தேவர்சிலை வழியாக செல்ல வேண்டும்.
லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை (29–ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (30–ந் தேதி) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மதுரை நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. மதுரை நகரின் எல்லையில் லாரிகளை நிறுத்தி வைக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

மதுரை : ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.

மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.

முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது 21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது 22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி, காலை 11 மணிக்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினமலர்

தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடையாது...!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 6152 அரசு பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுதாரித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அவசரம் அவசரமாக கழிப்பறை தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாம். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் அனைத்து கல்வி வாரியங்களும் வருகின்றன.

கழிப்பறைகள் பற்றிய ஆய்வு: அதில் பள்ளிக் கல்வியும் வருவதால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் பள்ளிகளில் முழுமையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதா என்று கடந்த மாதம் ஆய்வு நடத்தியது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை பெற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பள்ளிகளின் விவரங்கள்: மாநிலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை பள்ளிகள் கழிப்பறை இல்லாமல் இயங்கி வருகின்றன என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. 20 ஆயிரம் பள்ளிகள்: அதில் குறிப்பிட்டுள்ளபடி மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தலா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகம்: கர்நாடக மாநிலத்தில் 49 பள்ளிகளிலும், கேரளாவில் 212 பள்ளிகளிலும், குஜராத்தில் 940 பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன், தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு கேட்கும் அமைச்சகம்: மாநில அரசுகள், கழிப்பறை கட்டாமல் விட்டது தொடர்பாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியதுடன், மத்திய அரசின் மூலம் பெறுகின்ற நிதியை எதற்காக செலவிட்டுள்ளார்கள், என்ற கணக்கையும் கேட்டுள்ளது. 2057 பள்ளிகள்: இந்த பட்டியல் வெளியானதை அடுத்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி தமிழகத்தில் 2057 பள்ளிகளில் தான் கழிப்பறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி தரும் அறிவிப்பு: அதற்காக ரூபாய் 160 கோடியே 77 லட்சம் நிதியும் ஒதுக்குவதாக அறிவித்தனர். இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறை இல்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு: இதனையடுத்து தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தகவல்கள் பெறப்பட்ட பிறகு பள்ளிகளில் கழிப்பறைகள் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கழிப்பறைகள் கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தும்பைப்பட்டி ஊரணி பிள்ளையார் கோவில்.